/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்காக வழங்கிய அரசு வேலை, நிலம் குறித்து சர்ச்சை
/
திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்காக வழங்கிய அரசு வேலை, நிலம் குறித்து சர்ச்சை
திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்காக வழங்கிய அரசு வேலை, நிலம் குறித்து சர்ச்சை
திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்காக வழங்கிய அரசு வேலை, நிலம் குறித்து சர்ச்சை
ADDED : ஜூலை 10, 2025 02:47 AM
சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் இறப்பிற்கு பின் அவரது தம்பி நவீன்குமாருக்கு அரசு வேலை, 3 சென்ட் நிலத்தை அரசு நிவாரணமாக வழங்கியது. இதில் அவருக்கு திருப்தி இல்லை. இது குறித்து அரசும், மாவட்ட நிர்வாகம் எதுவும் தெரிவிக்காததால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் பக்தர் ஒருவர் காரில் இருந்த நகையை திருடியதாக கூறிய புகாரின் பேரில், தனிப்படை போலீசார் அவரை கடுமையாக தாக்கியதில் பலியானார். இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி., ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியல், மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தனிப்படை வாகன டிரைவர் ராமசந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மற்ற 5 போலீசாரை கைது செய்துள்ளனர்.
அஜித்குமார் தம்பி நவீன்குமாருக்கு ஆவின் நிர்வாகத்தில் டெக்னீசியன் பணி வழங்கப்பட்டது. அவர்களுக்கு திருப்புவனம் தாலுகா தேளி அருகே 3 சென்ட் நிலம் ஒதுக்கி, அதற்கான பட்டாவை அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி வழங்கினர்.
திடீரென எழுந்த சர்ச்சை
தனக்கு ஆவினில் வேலை வழங்கியதில் திருப்தி இல்லை. மதுரையில் ஏதேனும் ஒரு துறையில் பணி வழங்கினால் நன்றாக இருக்கும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத தேளி கிராமத்திற்கு அருகே 3 சென்ட் நிலம் ஒதுக்கியதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
அப்பகுதியில் அரசு நிர்ணயித்துள்ள விலை சென்ட்க்கு ரூ.2,000 மட்டுமே. ஒட்டு மொத்தமாக ரூ.6,000 மதிப்புள்ள 3 சென்ட் நிலம் மட்டுமே ஒதுக்கியுள்ளனர் என நவீன்குமார் அதிருப்தி தெரிவித்திருந்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம் தரப்பில் இதற்கு எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.