நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: புதுவயல் ஸ்ரீவித்யா கிரி மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சுவாமிநாதன் வரவேற்றார். அழகப்பா பல்கலை தேர்வாணையர் ஜோதிபாசு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி செல்வக்குமாரி லாவண்யா பட்டங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன், காரைக்குடி வித்யாகிரி பள்ளி முதல்வர் ஹேமாமாலினி புதுவயல் ஸ்ரீவித்யாகிரி பள்ளி முதல்வர் குமார் மற்றும் மாணவர்கள் ஆசிரியர் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

