/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு கடன் சங்கம் வைத்துள்ள வருங்கால வைப்பு நிதி நிலுவைக்கு கெடு; 15 நாட்களுக்குள் செலுத்த உத்தரவு
/
கூட்டுறவு கடன் சங்கம் வைத்துள்ள வருங்கால வைப்பு நிதி நிலுவைக்கு கெடு; 15 நாட்களுக்குள் செலுத்த உத்தரவு
கூட்டுறவு கடன் சங்கம் வைத்துள்ள வருங்கால வைப்பு நிதி நிலுவைக்கு கெடு; 15 நாட்களுக்குள் செலுத்த உத்தரவு
கூட்டுறவு கடன் சங்கம் வைத்துள்ள வருங்கால வைப்பு நிதி நிலுவைக்கு கெடு; 15 நாட்களுக்குள் செலுத்த உத்தரவு
ADDED : ஏப் 14, 2025 12:22 AM
சிவகங்கை; தென் மாவட்ட அளவில் செயல்படும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய ஊழியர்கள் மற்றும் சங்க பங்களிப்பு தொகையை வட்டியுடன் 15 நாட்களுக்குள் செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் செயல்படும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், அங்கு பணிபுரியும் அலுவலர், ஊழியர்களின் பங்களிப்பாக அடிப்படை சம்பளம், அகவிலைப்படியில் 12 சதவீதத்தை பிடித்தும், சங்கத்தின் பங்களிப்பு தொகையுடன் சேர்த்து, ஊழியர்கள் பெயரில் செலுத்தப்பட வேண்டும்.
ஆனால் சில ஆண்டுகளாக இந்த ஆறு மாவட்டங்களில் செயல்படும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பெரும்பாலானவை ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகை, சங்கத்தின் பங்களிப்பு தொகையை மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளன.
எனவே வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு தொகையை வட்டியுடன் செலுத்தும்படி மதுரை வருங்கால வைப்பு நிதி அலுவலகம், கூட்டுறவுத்துறை நிர்வாகத்திற்கு கெடு விதித்துள்ளது.
இதையடுத்து 6 மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் நிலுவை தொகையை வட்டியுடன் 15 நாட்களுக்குள் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என கூட்டுறவுத்துறை பதிவாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்
இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தென் மாவட்ட அளவில் ஊழியர்களுக்கு சம்பளமே வழங்க முடியாத நிலையில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள், வருங்கால வைப்பு நிதியை செலுத்தாமல் பல ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ளன. அவற்றை வட்டியுடன் செலுத்தினால் தான், ஊழியர்கள் ஓய்வுக்கு பின் வருங்கால வைப்பு நிதி பெற முடியும். இதுபோன்ற தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தை முடக்கவும் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு அதிகாரம் உண்டு. மத்திய கூட்டுறவு வங்கிகளிடம் கடன் பெற்றாவது வட்டியுடன் நிலுவையை செலுத்த வேண்டும் என்றார்.