ADDED : நவ 07, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் நாளை (நவ.8) கூட்டுறவு பணியாளர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அன்று காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெறும்.
இதில், தற்போது பணிபுரியும் கூட்டுறவு துறை பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
இங்கு வழங்கப்படும் மனுக்களுக்கு உரிய சட்டவிதிப்படி, கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை, அரசாணைகளுக்கு உட்பட்டு தீர்வு காணப்படும். கூட்டுறவு பணியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, துறை ரீதியான மனுக்களை வழங்கி பயன்பெறலாம், என்றார்.