/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மே 15 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மே 15 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மே 15 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மே 15 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்
ADDED : மே 10, 2025 02:02 AM
சிவகங்கை:கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர மே 15 முதல் ஜூன் 20 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு துறை மூலம் மாவட்டந்தோறும் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையம் செயல்படுகிறது. வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் மே 15 முதல் ஜூன் 20 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி வகுப்பு ஓராண்டு நடைபெறும். ஆண்டுக்கு இரு முறை செமஸ்டர் முறையில் தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கான பயிற்சி கட்டணமாக ரூ.20,850 செலுத்த வேண்டும்.
‛பயோமெட்ரிக்' முறையில் மாணவர்கள் வருகையை கூட்டுறவு மேலாண்மை நிலையம் பதிவு செய்ய வேண்டும். மாணவர்களுக்கு முதல், இரண்டாம் பருவ முறையில் கூட்டுறவு மேலாண்மை, நிர்வாகம் உட்பட 10 பாட பிரிவுகள் வரை கற்பிக்கப்படும். ஆக., 1 ம் தேதி முதல் வகுப்பு துவக்கப்படும். மாணவர்கள் தேர்வினை கூட்டுறவு இணைப்பதிவாளரை தலைவராக கொண்ட குழு மூலம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.