/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மத்திய கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு தவிர்க்க இட மாற்றம்; கூட்டுறவு பதிவாளர் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 12, 2025 05:25 AM

சிவகங்கை: மத்திய கூட்டுறவு வங்கிகளில் நிதி முறைகேடு தவிர்க்க 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர், ஊழியர்களை மாற்றம் செய்ய வேண்டும் என கூட்டுறவுதுறை பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மேலாண்மை இயக்குனரின் நிர்வாகத்தின் கீழ் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் செயல்படுகின்றன.
இந்த வங்கி கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு விவசாய, தொழில் கடன், நகை அடமான கடன் வழங்குதல், டெபாசிட் சேகரித்தல் உள்ளிட்ட நிதி சார்ந்த அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.
மாநில அளவில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் நிதி முறைகேடு, இணைக்கப்பட்ட சங்கங்களின் ஊழியர்களுடன் கூட்டு சதி செய்தல் போன்ற சம்பவங்களில் அலுவலர், ஊழியர்கள் ஈடுபடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம், வங்கி கிளை அலுவலகங்களில் அலுவலர் முதல் கடைநிலை ஊழியர்கள் 3 ஆண்டிற்கு மேல் ஒரே வங்கி கிளையில் பணிபுரிந்தால் அவர்களை கண்டிப்பாக பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கூட்டுறவு துறை பதிவாளர் நந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து கூட்டுறவு துறை அதிகாரி கூறியதாவது: வாடிக்கையாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் என்றால் நம்பகத்தன்மை இல்லாத சூழல் ஏற்படுகிறது.
இங்கொன்றும், அங்கொன்றுமாக அலுவலர், ஊழியர்கள் நிதி முறைகேடு, மோசடிகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்து வருகிறது. இதற்காகவே 3 ஆண்டிற்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர், ஊழியர்களை பணியிடமாற்றம் செய்ய பதிவாளர் உத்தரவிட்டுள்ளார், என்றார்.