ADDED : செப் 20, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாநில தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கிங்ஸ்டன்டேவிட் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில பொதுச் செயலாளர் நவநீதிகிருஷ்ணன் சங்க நடவடிக்கைகள் குறித்து பேசினார். மாநில பொருளாளர் விஜயன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரி, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினர். மாவட்ட பொருளாளர் பொன்னையா நன்றி கூறினார்.