/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பருத்தி பயிர் காப்பீடு இணை இயக்குனர் தகவல்
/
பருத்தி பயிர் காப்பீடு இணை இயக்குனர் தகவல்
ADDED : ஜூலை 05, 2025 12:44 AM
சிவகங்கை; பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பருத்தி பயிருக்கு காப்பீட்டிற்கான பிரீமிய தொகை செலுத்த ஜூலை 7 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என வேளாண் இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மாவட்ட அளவில் காரீப் பருவத்தில் பருத்தி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகையில் 5 சதவீத பிரீமிய தொகையான ஏக்கருக்கு ரூ.564.02 செலுத்தி, தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், தேசிய வங்கி மற்றும் அரசு இ- சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்யலாம்.
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது விண்ணப்பத்துடன், வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல் சான்று, ஆதார் எண்ணுடன் இணைத்த வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் இணைத்து காப்பீடு செய்ய வேண்டும். சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பளவு, வங்கி கணக்கு எண் சரியாக உள்ளதா என சரிபார்த்து காப்பீடு செய்த பின், ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதுகுறித்த விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.