/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கவுன்சிலர்கள் கோரிக்கைக்கு நடவடிக்கை வேண்டும்
/
கவுன்சிலர்கள் கோரிக்கைக்கு நடவடிக்கை வேண்டும்
ADDED : ஜூலை 05, 2025 12:45 AM
தேவகோட்டை; தேவகோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
நடந்த விவாதம்:
அய்யப்பன்: புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும்போது மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஏதாவது ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும்.எனது வார்டில் உப்பு தண்ணீர் வருவதால் பயன்படுத்த முடியவில்லை.
வடிவேல் முருகன்: மார்க்கெட்டை மாற்றினால் வியாபாரிகள் மட்டுமின்றி அந்த பகுதியை சுற்றி அனைத்து வியாபாரமும் பாதிக்கும்.
தலைவர்: பஸ் ஸ்டாண்ட் கடைக்காரர்கள் கடைகளை காலி செய்வதாக சொல்லி விட்டனர். அவர்களில் 18 ஆண்டு கடை நடத்தியவர்களுக்கு சட்டப்படி முன்னுரிமை தரப்படும். தினசரி மார்க்கெட் வியாபாரிகளிடமும் பேசுவோம். புது பஸ் ஸ்டாண்ட் வரைபடம் மாநில தலைமை பொறியாளர் அனுமதி பெற்றாகி விட்டது.
வேலுச்சாமி: எம்.எம். நகரில் இரண்டு ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை உள்ளது. பல முறை அதிகாரிகளிடம் சொல்லிவிட்டேன். தீர்வு இல்லை. சொந்த செலவில் குழாய் அமைத்து குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளேன். இரண்டு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.
அகிலா குமாரி: துப்புரவு பணியாளர் குடியிருப்பில் கழிப்பறை கட்டி திறக்கவில்லை.
அனிதா : இரவுசேரி பாதையில் சாக்கடை ஓடுகிறது. கூட்டத்தில் தெரிவித்து நடவடிக்கை இல்லையெனில் கூட்டம் ஏன் நடத்த வேண்டும்.
ரமேஷ், து.த.: புதிய எல்.இ.டி பல்ப் போட அனுமதிக்கு எழுதி இருந்தீர்கள். என்னாச்சு. பல இடங்கள் இருட்டாக இருக்கிறது. பொது நிதியில் வாங்கியாவது போட வேண்டும்.
தலைவர்: கூட்டத்தில் பேசுவதை அதிகாரிகள்இரண்டு நாளில் சரி செய்ய வேண்டும். திரும்ப திரும்ப கூறுவது சங்கடமாக உள்ளது. குடிநீரை பொறுத்தவரை ஒரு நாள் பாதிப்பு என்றாலும் மக்களுக்கு பதில் சொல்ல முடியாது. குடிநீர் பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.