/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி மாநகராட்சியில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
காரைக்குடி மாநகராட்சியில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
காரைக்குடி மாநகராட்சியில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
காரைக்குடி மாநகராட்சியில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : டிச 28, 2024 07:23 AM

காரைக்குடி, : காரைக்குடி மாநகராட்சியில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.
காரைக்குடி மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் முத்துத்துரை தலைமையில் நடந்தது. துணை மேயர் குணசேகரன், ஆணையாளர் சித்ரா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பல்வேறு கவுன்சிலர்கள் பாதாள சாக்கடை, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினர். நாய்கள் மற்றும் கால்நடைகளால் தினமும் விபத்து நடப்பதாகவும், கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேயர் முத்துத்துரை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து, பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர்கள் காரைக்குடி மாநகராட்சியில் முறையாக பணிகள் நடைபெறவில்லை, தங்களது வார்டுகளில் திட்டப்பணிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அ.தி.மு.க., கவுன்சிலர்கள், குருபாலு, பிரகாஷ், தேவன், ராம்குமார், அமுதா மற்றும் சுயேச்சை மெய்யர் வெளிநடப்பு செய்தனர்.