/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
திருப்புவனத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : மார் 20, 2025 05:54 AM
திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சி கூட்டம் தலைவர் சேங்கைமாறன் (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பது, தார்ச்சாலை, பேவர் பிளாக் சாலை அமைப்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற த.மா.கா., மற்றும் பா.ஜ., உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
பா.ஜ., உறுப்பினர் செல்வராஜ் கூறுகையில்: திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 16 கோடி ரூபாய் செலவில் குழாய் பதிப்பு பணி நடைபெறுகின்றன. எனது வார்டில் பணிகள் முழுமை பெறவில்லை. பல வீடுகளுக்கு இணைப்பு தரவில்லை அதனை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளேன், என்றார்.
த.மா.கா., உறுப்பினர் பாரத்ராஜா கூறுகையில்: பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முன்பு 24மணி நேரத்திற்கு முன்னதாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும், திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஊரைவிட்டு தள்ளி குப்பை கிடங்கை தேர்வு செய்துள்ளனர். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடம் என்ன ஆனது என தெரியவில்லை. தீர்மானம் குறித்து 24 மணி நேரத்திற்கு முன்னதாக தகவல் தர வேண்டும்,ஆனால் தரவில்லை , எனவே வெளிநடப்பு செய்துள்ளேன், என்றார்.
பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் கூறுகையில்: திருப்புவனம் நெல்முடிக்கரை குப்பை கிடங்கு மற்றும் அக்ரோ சர்வீஸ் இடமும் உள்ளதால் அந்த இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்துள்ளோம், இங்குள்ள குப்பைகளை தேளி அருகே தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் கொட்ட ஏற்பாடு செய்துள்ளோம், என்றார்.