/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் கவுன்சிலிங் ஜூன் 2 முதல் துவக்கம்
/
மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் கவுன்சிலிங் ஜூன் 2 முதல் துவக்கம்
மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் கவுன்சிலிங் ஜூன் 2 முதல் துவக்கம்
மன்னர் துரைசிங்கம் கல்லுாரியில் கவுன்சிலிங் ஜூன் 2 முதல் துவக்கம்
ADDED : மே 31, 2025 12:23 AM
சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஜூன் 2 முதல் துவங்குவதாக முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் சேர ஜூன் 2 ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. அன்றைய தினம் விளையாட்டு வீரர், தேசிய மாணவர் படை, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள், பாதுகாப்பு துறையினர், அந்தமான் நிக்கோபார் மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஜூன் 4 அன்று பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுக்கும், ஜூன் 5 ல் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையில் பாடப்பிரிவுக்கும் நடைபெறும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 9 ம் தேதி அறிவியல் பாடப்பிரிவு, ஜூன் 10 அன்று கலைப்பாட பிரிவுக்கு நடக்கும். மூன்றாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 13 அன்று கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு நடத்தப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் உரிய சான்றுகளுடன் பங்கேற்கலாம், என்றார்.