நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மன்னர் பள்ளிகளின் செயலர் குமரகுரு முன்னிலை வகித்தார்.
தோட்டக்கலை (ஓய்வு) உதவி இயக்குனர் இளங்கோவன் தலைமை வகித்தார். சார்பதிவாளர் சுரேஷ், எழுத்தாளர் ஈஸ்வரன், ஜவஹர் கிருஷ்ணன், காளிராஜா, நகராட்சி கவுன்சிலர் மகேஷ்குமார், காங்., மாநில மகளிரணி ஸ்ரீவித்யா கணபதி, தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் பங்கேற்றனர்.
இலக்கிய மாமணி விருது பெற்ற நடராஜன் ஏற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா நடத்துவது, அரசுக்கு நன்றி தெரிவிப்பது என தீர்மானித்தனர். நேரு யுவகேந்திரா தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

