/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் கொத்தடிமை தம்பதி மீட்பு
/
தேவகோட்டையில் கொத்தடிமை தம்பதி மீட்பு
ADDED : டிச 06, 2025 02:15 AM
சிவகங்கை: தேவகோட்டையில் ரூ.50 ஆயிரத்திற்காக கணவன்,மனைவியை கொத்தடிமையாக வைத்து ஆடு மேய்க்க செய்ததாக அவற்றின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே செவல் கண்மாயை சேர்ந்த பி.இ., பட்டதாரி பாரதிராஜா 30. இவர் 250 செம்மறி ஆடுகளை தேவகோட்டை பகுதியில் கிடை அமைத்து வளர்த்து வருகிறார்.
ஒன்றரை ஆண்டுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டம்பேராவூரணியை சேர்ந்த பாண்டியன் மகன் வரதராஜன் 23, இவரது மனைவி சரண்யா 19, ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் தேவகோட்டைக்கு புரோக்கர் மூலம் வந்தனர்.
இங்கு பாரதிராஜாவின் ஆடுகளை மேய்க்க ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்து கொத்தடிமையாக பயன்படுத்தினர்.
ஒரு ஆண்டிற்கு என ஒப்பந்தம் செய்த நிலையில் ஒன்றரை ஆண்டாக ஆடு மேய்க்கும் தொழிலில் தம்பதியினரை ஈடுபடுத்தி வந்துள்ளார்.
தேவகோட்டை சப் -கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ்-க்கு புகார் சென்றது. தாசில்தார் சேதுநம்பு, தொழிலாளர் நல ஆய்வாளர் ஆறுமுகம், போலீஸ் எஸ்.ஐ.,க் கள் இருவர் வெளிமுத்தி என்ற கிராமத்தில் ஆய்வு செய்தபோது, வரதராஜன், மனைவி, ஒன்றரை வயது குழந்தையுடன் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு காரைக்குடியில் தங்க வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தளக்காவயல் வி.ஏ.ஓ., மஞ்சுளா புகாரில் தேவகோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், கொத்தடிமை மீட்பு சட்டத்தின் கீழ் ஆடுகளின் உரிமையாளர் பாரதிராஜாவை கைது செய்தார்.

