/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொத்தடிமை தம்பதி மீட்பு பொறியியல் பட்டதாரிக்கு 'காப்பு'
/
கொத்தடிமை தம்பதி மீட்பு பொறியியல் பட்டதாரிக்கு 'காப்பு'
கொத்தடிமை தம்பதி மீட்பு பொறியியல் பட்டதாரிக்கு 'காப்பு'
கொத்தடிமை தம்பதி மீட்பு பொறியியல் பட்டதாரிக்கு 'காப்பு'
ADDED : டிச 06, 2025 02:07 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே செவல் கண்மாயை சேர்ந்த பி.இ., பட்டதாரி பாரதிராஜா, 30. இவர், 250 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்த வரதராஜன், 23, தன் மனைவி சரண்யா, 19, ஒன்றரை வயது கைக்குழந்தையுடன், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தேவகோட்டைக்கு புரோக்கர் மூலம் வந்தார்.
பாரதிராஜாவின் ஆடுகளை மேய்க்க, 50,000 ரூபாய் முன்பணம் கொடுத்து கொத்தடிமையாக பயன்படுத்தினர். ஓராண்டு ஒப்பந்தம் செய்த நிலையில், ஒன்றரை ஆண்டாக ஆடு மேய்க்கும் தொழிலில் தம்பதியினரை ஈடுபடுத்தி வந்துள்ளார்.
தேவகோட்டை போலீசார், தாசில்தார், தொழிலாளர் நல ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்து, வரதராஜன், மனைவி, குழந்தையை மீட்டனர். கொத்தடிமை மீட்பு சட்டத்தின் கீழ் பாரதிராஜாவை தேவகோட்டை தாலுகா போலீசார் கைது செய்தனர்.