/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழக அரசை கண்டித்து ஜன. 6 முதல் ஸ்டிரைக்; ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் அறிவிப்பு

ADDED : டிச 05, 2025 06:58 AM

சிவகங்கை: ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்த இடைக்கால அறிக்கையை வெளியிடாத தமிழக அரசை கண்டித்து 2026 ஜன. 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும்,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் எம்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: 2021 சட்டசபை தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவோம் என தி.மு.க., உறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்தவித ஓய்வூதியம் வழங்குவது, அதை எப்படி அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய அரசு செயலர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்., தலைமையில் ஒரு நபர் குழுவை அறிவித்தது.
அந்த குழுவும் செப்.,ல் இடைக்கால அறிக்கையை அரசுக்கு வழங்கிவிட்டது. ஆனால், அறிக்கை தாக்கல் செய்து 2 மாதங்களுக்கு மேலாகியும் இது வரை அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களை ஊழியர்களுக்கு அரசு வெளியிட முன்வரவில்லை.
இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும்.
இதற்காக தமிழக அரசை கண்டித்தும், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2026 ஜன., 6 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என்றார்.