/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாகனம் செல்ல முடியாத பெருமானேந்தல் ரோடு
/
வாகனம் செல்ல முடியாத பெருமானேந்தல் ரோடு
ADDED : டிச 05, 2025 06:00 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே பெருமானேந்தல் கிராமத்திற்கு செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பெருமானேந்தல் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கிராமத்தில் இருந்து தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளையான்குடி சாலை கிராமம் பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் .
கிராமத்திற்கு அரணையூர் விலக்கில் இருந்து போடப்பட்ட தார் ரோடு மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக இருப்பதால் மாணவர்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
கிராமத்தில் உள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட ஆட்டோக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வருவதில்லை. ரோட்டை சரி செய்ய வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

