/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திறக்கப்படாத உர நிறுவன மேலாளர் அலுவலகம்
/
திறக்கப்படாத உர நிறுவன மேலாளர் அலுவலகம்
ADDED : டிச 05, 2025 05:58 AM
சிவகங்கை: சிவகங்கையில் உரக்கோடவுன் அருகே தமிழ்நாடு உர நிறுவன மண்டல மேலாளர் அலுவலக கட்டடம் கட்டி 4 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.
கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள உர நிறுவனத்திற்கென சிவகங்கை, தொண்டி ரோட்டில் கோடவுன் உள்ளது. இங்கு ராபி பருவ சீசனில் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மூலம் யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களை வழங்க ஆயிரம் டன் வரை கோடவுனில் வைக்கப்படும்.
அவ்வப்போது தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி, நேரடியாக விவசாயிகளுக்கு பயிர் கடனுடன் உரம் வழங்கப்படும். தொண்டி ரோட்டில் உள்ள உரக்கோடவுனை நிர்வகிக்க மண்டல மேலாளரின் கீழ் அலுவலர்கள் செயல்படுகின்றனர்.
பல ஆண்டாக மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் இன்றி வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. இந்நிலையில் உரக்கோடவுன் அருகே மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட ரூ.45 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கட்டுமான பணிகள் தொடங்கின. 4 ஆண்டுகளாக மண்டல மேலாளர் அலுவலக புதிய கட்டடம் கட்டுவதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வருகிறது.
இதனால் சொந்த கட்டடம் இன்றி உர நிறுவன மண்டல மேலாளர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. புதிய அலுவலக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ஆய்வுக்கு வரும் கலெக்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இந்த கட்டட பணி மந்த நிலையிலேயே நடைபெற்று வருவதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

