ADDED : டிச 14, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் யூனியன் அலுவலக பஸ் ஸ்டாப் அருகே , நேற்று மதியம் இரண்டு காளைகள் மோதியது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற டூவீலர் மீது மாடுகள் மோதியதில் இருவர் கீழே விழுந்து காயமடைந்தனர். அந்த வழியாக நடந்து சென்ற தேவகோட்டை சுந்தரம் 72., மீதும் மோதின. இதில் அவர் காயமடைந்தார்.
ரோட்டில் திரியும் மாடுகளை உரியவர்கள் பிடித்துக் கொள்ள வேண்டும், இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி சார்பில் தினமும் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தும் பயனில்லை. நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

