/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின்கம்பி அறுந்து பசு உயிரிழப்பு
/
மின்கம்பி அறுந்து பசு உயிரிழப்பு
ADDED : டிச 23, 2024 05:04 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவில் மின்கம்பி அறுந்து விழுந்து உயிர்பலி ஏற்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.
எஸ்.புதூர் அருகே தர்மபட்டியை சேர்ந்த விவசாயி சாமிநாதன். இவர் தனது பசு மாட்டை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார்.
டிச., 20ஆம் தேதி இரவு தோட்டத்தின் வழியாக சென்ற மின்கம்பி அறுந்து மாட்டின் மீது விழுந்ததில் பசு மாடு உயிரிழந்தது.
சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட பல இடங்களில் தொடர்ச்சியாக மின்கம்பிகள் அறுந்து விழுவதும், மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கிறது.
இப்பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பிகள் பழுதடைந்தும், தாழ்வாக தொங்கும் நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்து நேரிடுகிறது.
எனவே பழுதடைந்த பழைய மின்கம்பிகளை மாற்றி, மின் வழித்தடங்களை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

