/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயிலில் சிக்கிய மாடு: பாலத்தின் நடுவே நிறுத்தம்
/
ரயிலில் சிக்கிய மாடு: பாலத்தின் நடுவே நிறுத்தம்
ADDED : அக் 26, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.
நேற்று மாலை 4:30 மணிக்கு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரயில் கிளம்பியது. அண்ணாதுரை சிலை ரயில்வே கேட் பகுதியில் பசு மாடு ஒன்றின் மீது மோதியது.
மாடு ரயிலின் அடியில் சிக்கி சிறிது துாரம் இழுத்து சென்ற நிலையில் வைகை ஆறு ரயில்வே மேம்பாலத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.
ரயில்வே போலீசார், ஊழியர்கள் வந்து இறந்த பசுமாட்டை அகற்றிய பிறகு ரயில் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு கிளம்பி சென் றது.

