/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழிச்சாலையில் மேயும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
/
நான்கு வழிச்சாலையில் மேயும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
நான்கு வழிச்சாலையில் மேயும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
நான்கு வழிச்சாலையில் மேயும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : நவ 21, 2025 04:55 AM

திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் புற்கள் வளர்ந்துள்ளதால் மாடுகளை மேய விடுகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்கு வரத்து நடந்து வருகிறது.
தினசரி மதுரை-பரமக்குடி சாலையில் ஏழாயிரம் பஸ், லாரி, கார் போன்ற கனரக வாகனங்கள் கடந்து வருகின்றன. நான்கு வழிச்சாலையில் ஆங்காங்கே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளன. சென்டர் மீடியனில் அரளிச் செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.
மழைக்காலங்களில் அரளிச் செடிகள் இடையே புற்கள் அதிகளவில் வளர்வது உண்டு. இவற்றை நான்கு வழிச்சாலை பராமரிக்கும் பணியை ஒப் பந்தம் மேற்கொண்டவர்கள் அகற்றுவது வழக்கம்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்டர் மீடியனில் புற்கள் அகற்றப் படவில்லை. இதனால் சென்டர் மீடியனில் உள்ள புற்களை கால்நடை வளர்ப்பவர்கள் பயன் படுத்துகின்றனர்.
தட்டான்குளம், கீழடி, கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் சென்டர் மீடியன்களில் மாடுகளை கட்டி விட்டு சென்று விடுகின்றனர். மாடுகள் திடீரென ரோட்டை கடக்கும் போது கயிறு கட்டப்பட்டிருப்பதால் பாதி வழியில் நின்று விடுகின்றன. டூவீலர்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

