/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தண்ணீரை விலைக்கு வாங்கி விளைவித்த நெற்பயிர் பயிரை மேய்ந்த மாடுகளால் தவிப்பு

ADDED : டிச 15, 2025 06:03 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே தண்ணீரை விலைக்கு வாங்கி வளர்த்த நெற்பயிரை கோயில் மாடுகள் தின்று நாசமாக்கியதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
ஐநூத்திபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆண்டிச்சாமி. இவர் தனது 3 ஏக்கர் நிலத்தில் நெல் நடவு செய்து உள்ளார். போதிய மழை பெய்யாத நிலையில் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி பயிரை வளர்த்துள்ளார். இப்பகுதியில் திரியும் கோயில் மாடுகள் பயிர்களை நாசம் செய்யவதால் வயலில் குடில் அமைத்து இரவு பகலாக கண்காணித்து வந்தார்.
அப்படி இருந்தும் டிச. 13ஆம் தேதி இரவு 50க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பெரும்பாலான பயிர்களை தின்று வீணாக்கி விட்டன.
ஆண்டிச்சாமி தெரிவித்ததாவது, வட்டிக்கு கடன் வாங்கியும், மனைவியின் நகைகளை அடகு வைத்தும் செலவழித்து பயிரை வளர்த்து இருந்தேன். கோயில் மாடுகளால் பயிர்கள் சேதம் அடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. அவற்றால் விவசாயம் செய்ய முடியவில்லை. பயிர்களை நாசம் செய்கின்றன. சம்மந்தப்பட்டவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேநிலை நீடித்தால் இப்பகுதியில் யாரும் விவசாயம் செய்ய ஆர்வம் காட்ட மாட்டார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.