/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெறிநாய் தாக்கி பலியாகும் மாடுகள்; விவசாயிகள் அச்சம்
/
வெறிநாய் தாக்கி பலியாகும் மாடுகள்; விவசாயிகள் அச்சம்
வெறிநாய் தாக்கி பலியாகும் மாடுகள்; விவசாயிகள் அச்சம்
வெறிநாய் தாக்கி பலியாகும் மாடுகள்; விவசாயிகள் அச்சம்
ADDED : மார் 08, 2025 06:04 AM

இப்பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சில நாட்களாக கோயில் மாடுகளும், வீட்டு மாடுகளும் வெறிநாய் தாக்கி இறந்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
வெறிநாய்கள் மாடுகளை கடிக்கும் போது மாடுகளுக்கும் ரேபிஸ் நோய் தாக்குகிறது. அதன் காரணமாக வாயில் எச்சில் ஒழுகி முரண்டு பிடித்து அலையும் மாடுகள் சில நாட்களில் இறந்து விடுகின்றன. இந்த மாடுகளால் மற்ற மாடுகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
கால்நடைத்துறை இணை இயக்குனர் ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் வெறிநோய் பாதிக்கப்பட்ட மாடுகளை பார்வையிட்டனர்.
ராமச்சந்திரன் தெரிவித்ததாவது: ''பாதிக்கப்பட்டுள்ள மாடுகளின் எச்சில், ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெறி நாய் கடிப்பதால் ஏற்பட்ட பாதிப்பு போல தான் இருக்கிறது. வெறிநாய்கள் மூலம் மாடுகளுக்கு பரவிய வெறிநோய் அம்மாடுகள் மூலம் மற்ற மாடுகளுக்கு பரவாது.
வெறிநாய்களை கட்டுப்படுத்தவும் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடவும் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே 6 கால்நடை ஆம்புலன்ஸ் இருக்கும் நிலையில் கூடுதலாக 2 வர இருக்கிறது. அதில் ஒன்று சிங்கம்புணரி பகுதிக்கு தரப்படும். பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து தெரிவித்தபோது, நகரில் திரியும் வெறிநாய்களை பிடித்து அடைத்துவைத்து கண்காணிக்கவும், மற்ற நாய்களுக்கு கருத்தடை ஊசி போடவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.மேலும் தினம்தோறும் ஏராளமானோர் நாய்களால் கடிபட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் பகுதி, வாரச்சந்தை, அரசு மருத்துவமனை, அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் நாய்கள் ஆடு மற்றும் மாடுகளை கடித்து வருவதால் கால்நடைகள் பலியாகி வருகின்றன.
இரவு நேரங்களில் டூ வீலர் மற்றும் சைக்கிள்களில் செல்பவர்களையும் நாய்கள் விரட்டி கடிப்பதால் விபத்துக்களிலும் சிக்கி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.