/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே ஸ்டேஷனுக்குள் உலா வரும் மாடுகள்
/
ரயில்வே ஸ்டேஷனுக்குள் உலா வரும் மாடுகள்
ADDED : அக் 22, 2024 05:03 AM

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் மாடுகள், நாய்கள் உலா வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு தினந்தோறும் 15க்கும் மேற்பட்ட ரயில்களும்,சரக்கு ரயில்களும் சென்று வருகின்றன. தினம்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்கிற நிலையில் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்துக்குள் அவ்வப்போது மாடுகள் மற்றும் நாய்கள் சுற்றி திரிவதால் பயணிகள் அச்சப்படுகின்றனர். ரயில்களுக்கு காத்திருக்கும் போது ஒரு சில நேரங்களில் தாக்க முயல்வதால் பயணிகள் ஓடுகின்றனர்.ரயில்வே நிர்வாகத்தினர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் சுற்றி திரியும் மாடுகளையும்,நாய்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.