/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் திரியும் மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு
/
ரோட்டில் திரியும் மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு
ADDED : டிச 18, 2025 05:45 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், உரிமையாளர்கள் வராத பட்சத்தில் அவற்றை கோசாலை வசம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை நகராட்சி பகுதியில் மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலை, திருப்புத்துார், மானாமதுரை நெடுஞ்சாலை, காந்தி வீதி, நேருபஜார், வாரச்சந்தை ரோடுகள் அமைந்துள்ளன. இந்த சாலையில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், வாகன விபத்து ஏற்பட காரணமாகவும் உள்ளது. இது குறித்து நகராட்சிக்கு மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 பிரிவு 292(6) மற்றும் (7)ன்படி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து சம்மந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். உரிமையாளர்கள் வராதபட்சத்தில் கால்நடைகள் பராமரிக்கும் கோசாலை வசம் ஒப்படைக்கப்படும் என்றார்.

