/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ்களில் பெயர் பேட்ஜ் இல்லாமல் பணிபுரியும் ஊழியர்கள்
/
அரசு பஸ்களில் பெயர் பேட்ஜ் இல்லாமல் பணிபுரியும் ஊழியர்கள்
அரசு பஸ்களில் பெயர் பேட்ஜ் இல்லாமல் பணிபுரியும் ஊழியர்கள்
அரசு பஸ்களில் பெயர் பேட்ஜ் இல்லாமல் பணிபுரியும் ஊழியர்கள்
ADDED : டிச 18, 2025 05:45 AM
திருப்புவனம்: அரசு பஸ்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள் பெயர், நம்பர் வில்லை இன்றி பணிபுரிவதால் பயணிகள் குழப்பமடைகின்றனர்.
போக்குவரத்து வசதிக்காக அரசு டவுன் பஸ்கள், தொலை துார பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் கண்டக்டர்கள், டிரைவர்கள் பணிபுரிகின்றனர். மதுரையில் இருந்து ராமேஸ்வரம், ராமநாதபுரம், கமுதி, ஆர்.எஸ்.மங்கலம், இளையான்குடி, முதுகுளத்துார் உள்ளிட்ட ஊர்களுக்கு மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில் பணிபுரியும் கண்டக்டர்கள், டிரைவர்கள் சீருடை மட்டுமே அணிகின்றனர். மற்றபடி அவர்களின் பெயர், நம்பர் உள்ளிட்ட எதுவுமே தெரிவதில்லை. ஒரு சில கண்டக்டர்கள் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட ஊர்களில் நிறுத்தம் இருந்தும் பயணிகளை பஸ்களில் ஏற்ற மறுக்கின்றனர். மேலும் பெண் பயணிகள், முதியோர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்கின்றனர்.
போக்குவரத்து கழக விதிப்படி அரசு பஸ்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள் சீருடை, பெயர் வில்லை, நம்பர் வில்லை உள்ளிட்டவற்றை அணிந்திருக்க வேண்டும், டிக்கெட் பரிசோதகர் பஸ்களில் சோதனை செய்யும் போது உரிய சீருடை, பெயர் வில்லை இல்லை என்றால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள், மதுரை - பரமக்குடி வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் சென்று வருகின்றன.
ஆனால் சமீப காலமாக பஸ்களில் பணிபுரியும் கண்டக்டர், டிரைவர்கள் பெயர், நம்பர் வில்லை இன்றியே பணிபுரிகின்றனர்.பஸ்சில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள் பெயர், நம்பர் வில்லை அணிந்து பணிபுரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

