/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திறக்கும் முன்னரே எரிவாயு மயான சுவரில் விரிசல்: மழுப்பும் திருப்புவனம் பேரூராட்சி அதிகாரிகள்
/
திறக்கும் முன்னரே எரிவாயு மயான சுவரில் விரிசல்: மழுப்பும் திருப்புவனம் பேரூராட்சி அதிகாரிகள்
திறக்கும் முன்னரே எரிவாயு மயான சுவரில் விரிசல்: மழுப்பும் திருப்புவனம் பேரூராட்சி அதிகாரிகள்
திறக்கும் முன்னரே எரிவாயு மயான சுவரில் விரிசல்: மழுப்பும் திருப்புவனம் பேரூராட்சி அதிகாரிகள்
ADDED : மே 08, 2025 03:15 AM

திருப்புவனம் நெல்முடிகரை மயானத்தில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மின் எரிவாயு மயானம் கட்டும் பணி 2023, ஏப்ரலில் தொடங்கப்பட்டு நவம்பரில் பணிகள் நிறைவடைந்தன. மயானத்தின் முன்புறம் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு மக்கள் அமர நிழற்குடை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளன. மின் மயானத்தின் உட்புறம் உயிரிழந்தவர்களை எரிக்கும் போது ஏற்படும் வெப்பத்தின் அளவு உள்ளிட்டவைகள் பரிசோதனை செய்யப்பட்டு விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
தரக் கட்டுப்பாடு ஆய்வு பணிகள் நடைபெறாததால் இதுவரை திறக்கப்படவில்லை. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு வருடம் ஆகியும் திறக்கப்படாத நிலையில் உள்ளது. உயிரிழந்தவர்களை எரியூட்டும் போது அதிகளவு வெப்பம் வெளியேற வாய்ப்புண்டு, அதனை தாங்கும் அளவிற்கு தான் கட்டடம் கட்டப்பட வேண்டும், ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வராத நிலையில் கட்டடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த பகுதியை முழுவதுமாக அகற்றாமல் லேசாக பெயர்த்து எடுத்து விட்டு மீண்டும் பூச்சு பணி ஏப். 3 ம்தேதி நடைபெற்றது. கட்டடம் திறப்பு விழாவிற்காக பெயின்ட் பணி எல்லாம் முடிந்த நிலையில் பேட்ஜ் ஒர்க் நடப்பதால் மீண்டும் பெயின்டிங் செய்ய வேண்டும், கட்டடம் உரிய முறையில் கட்டப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் வெளிமாவட்ட பொறியாளர்களை வைத்து கட்டடத்தை ஆய்வு செய்த பின் திறக்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் புதிய எரிவாயு மயானத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் முத்துராஜா எழுப்பிய கேள்விக்கு பேரூராட்சி செயல் அலுவலர் 2021 ல் மூலதன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து விட்டன.
பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெற வில்லை என பதிலளித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டட விரிசல், சேதமடைந்த சுவர்கள், தரை தளங்கள் உள்ளிட்டவற்றை சரி செய்யும் பணியில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்த நிலையில் அதனை செயல் அலுவலர் மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.