/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீபாவளி சந்தையில் அலை மோதிய கூட்டம்; ரூ. 1 கோடிக்கு விற்பனை
/
தீபாவளி சந்தையில் அலை மோதிய கூட்டம்; ரூ. 1 கோடிக்கு விற்பனை
தீபாவளி சந்தையில் அலை மோதிய கூட்டம்; ரூ. 1 கோடிக்கு விற்பனை
தீபாவளி சந்தையில் அலை மோதிய கூட்டம்; ரூ. 1 கோடிக்கு விற்பனை
ADDED : அக் 15, 2025 12:29 AM

திருப்புவனம்; திருப்புவனத்தில் நேற்று நடந்த சந்தையில் ஆடு, கோழி வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் திரண்டதால் சந்தை நடைபெறும் இடம் முழுவதும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அக். 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. திருப்புவனம் தாலுகாவில் பெத்தானேந்தல், மணல்மேடு, அல்லிநகரம், கீழடி , கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் ஆடு, கறவை மாடு, கோழி உள்ளிட்டவை வளர்க்கப்படுகின்றன.
தீபாவளி வருவதால் திருப்புவனம் சந்தைக்கு நேற்று செம்மறியாடு, வெள்ளாடு, சண்டை கிடா, கோழி, சேவல் உள்ளிட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. சாதாரண நாட்களில் 10 கிலோ எடை கொண்ட ஆடு 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும், நேற்றைய சந்தையில் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. சண்டை கிடா உள்ளிட்டவைகள் 16 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
கோழி , சேவல் உள்ளிட்டவைகள் கிலோ 300 ரூபாயில் இருந்து 450 ரூபாய் வரை விற்பனையானது.
காலை 9:00 மணி வரை நடந்த சந்தையில் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஆடு, கோழி, சேவல், சண்டை கிடா உள்ளிட்டவை விற்பனையானது.
ஆடுகளை ஏற்றவும், இறக்கவும் 50க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் வந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.