/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை-பெரியகண்ணனுார் டவுன் பஸ் நேரம் மாற்றம்
/
சிவகங்கை-பெரியகண்ணனுார் டவுன் பஸ் நேரம் மாற்றம்
ADDED : அக் 15, 2025 12:37 AM
சிவகங்கை, ; சிவகங்கையில் இருந்து பெரியகண்ணனுார் செல்லும் அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
சிவகங்கையில் இருந்து அதிகாலை 5:15 மணிக்கு பெரியகண்ணனுார் புறப்படும் அரசு டவுன் பஸ் கலைக்குளம், கண்ணகிபுரம், செம்பனுார் வழியாக காலை 6:00 மணிக்கு பெரியகண்ணனுார் சேர்கிறது. உடன் அங்கிருந்து திரும்பி விடுகிறது.
இதனால் காலையில் சிவகங்கைக்கு பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமம் அடைகின்றனர். அதே போன்று சிவகங்கையில் மாலை 4:15 மணிக்கு புறப்படும் பஸ்சில் சிவகங்கையில் இருந்து பெரியகண்ணனுார் செல்லும் மாணவ, மாணவிகள் இந்த பஸ்சில் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே சிவகங்கையில் மாலையில் 4:45 மணிக்கு பெரியகண்ணனுார் புறப்பட வேண்டும். தினமும் காலை 7:00 மணிக்கு பெரியகண்ணனுாரில் புறப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.
நேற்று காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் லெனின் தலைமையில் சமரச கூட்டம் நடந்தது. இதில் மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், காளையார்கோவில் எஸ்.ஐ., செழியன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர், ஆர்.ஐ., வி.ஏ.ஓ.,க்கள், மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் தென்னரசு, திருமாறன், மணிகண்டன், சலேத்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் தினமும் மாலை 4:45 மணிக்கு சிவகங்கையில் இருந்து பஸ் புறப்படும். காலையில் பெரியகண்ணனுாரில் எடுக்கும் நேரத்தை மாற்றி அமைக்க நவ., 5 வரை அவகாசம் தர வேண்டும் என அரசு போக்குவரத்து கழகம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.