ADDED : ஜன 28, 2025 05:31 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஆபத்தான வளைவுகளில் அபாய எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்துக்கள் தொடர்கிறது.
இவ்வொன்றியத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. அப்பகுதியில் வாகனங்கள் வரும்போது எச்சரிக்கைக்காக சிவப்பு வண்ணத்தில் அறிவிப்பு பலகை அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் பல இடங்களில் இப்பலகைகள் தற்போது இல்லை. குறிப்பாக எஸ்.எஸ்.கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் விலக்கு அருகே உள்ள வளைவில் அதிக விபத்துக்கள் நடந்துள்ளது.
பல வாகனங்கள் இப்பகுதியில் கவிழ்ந்து சேதம் ஏற்பட்ட நிலையில் எச்சரிக்கை பலகை இல்லாதது சமூக ஆர்வலர்களுக்கு கவலை அளிக்கிறது.
வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் வளைவின் அளவு தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே தேவையான இடங்களில் அபாய எச்சரிக்கை பலகைகளையும், சிக்னல் விளக்குகளையும் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினரும் போலீசாரும் முன்வர வேண்டும்.