/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு
/
சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு
ADDED : பிப் 15, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை ராமச்சந்திரபூங்காவில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
எஸ்.பி.,அர்விந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர்கள் தேவி, கோட்டைச்சாமி, எஸ்.ஐ., முருகானந்தம் பள்ளி கல்லுாரி மாணவர்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக நடந்து சென்றனர். சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினர்.

