/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பெண்களிடம் ரூ.4 லட்சம் வரை மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
/
சிவகங்கை பெண்களிடம் ரூ.4 லட்சம் வரை மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சிவகங்கை பெண்களிடம் ரூ.4 லட்சம் வரை மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சிவகங்கை பெண்களிடம் ரூ.4 லட்சம் வரை மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ADDED : செப் 28, 2025 03:06 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் இரு பெண்கள், ஒரு ஆணிடம் வங்கியில் இருந்து பேசுவதாகவும், பகுதி நேர வேலை தருவதாக கூறி ரூ.4 லட்சம் வரை மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியை சேர்ந்தவர் 54 வயது பெண். இவர் கடந்த 12ல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஒரு விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றார். பின்பு டெலிகிராம் மூலமாக ஒரு லிங்க் வந்துள்ளது. அதை ஆன் செய்யவும் அவர்கள் கூறிய ஒரு ரெஸ்டாரண்ட்டுக்கு ரேட்டிங் ஸ்டார் கொடுத்து டாஸ்க் விளையாடினார். அந்த டாஸ்க்கை முடித்தால் அதிக லாபம் கிடைக்கும் என பெண்ணை நம்ப வைத்தார். அந்த பெண் அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 300 செலுத்தினார். பெற்ற பணத்திற்கான லாபத்தொகையை அந்த நபர் கொடுக்க வில்லை. தான் ஏமாந்ததை உணர்ந்த அந்த பெண் சிவகங்கை சைபர் கிரைமில் புகார் அளித்தார்.
காளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். இவரது அலைபேசிக்கு செப்., 16ல் ஒருவர் தொடர்பு கொண்டார்.பேசிய நபர் வங்கியில் இருந்து பேசியதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். வங்கிக்கணக்கு விபரங்கள், ஆதார் எண், பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை கூறியுள்ளார். மறுநாள் வங்கிக்கு சென்று வங்கிக்கணக்கை முடக்கம் செய்ய கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் வங்கி நிர்வாகம் முடக்கவில்லை. இதனால் செப்.20 முதல் 22 வரை 4 தவணைகளாக மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 799 திருடப்பட்டது. இதை அறிந்த அந்த பெண் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
காரைக்குடியை சேர்ந்தவர் 45 வயது ஆண். இவரை அலைபேசியில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் தன்னை கிரடிட் கார்டு மாற்றித் தருபவர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். அவர் கூறியதை நம்பிய அந்த ஆண் அவரின் கார்டு விபரங்களை கூறியுள்ளார். பின்னர் அவரது கார்டில் இருந்து ரூ.21 ஆயிரத்து 538 திருடப்பட்டுள்ளது. இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு அவர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.