/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பணி முடிக்காத கான்ட்ராக்டருக்கு தினமும் அபராதம் கட்டட பணிகளை முடிக்காததால்

ADDED : செப் 26, 2024 02:52 AM
சிவகங்கை:''சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கட்டட பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் முடிக்காத கான்ட்ராக்டருக்கு தினமும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது,'' என நகராட்சி தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் கட்டடம் கட்டுமான பணிகள் 2023 மார்ச் 8ல் ரூ.ஒரு கோடியே 95 லட்சத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டு துவங்கப்பட்டது. கட்டுமானப் பணிகளை செப்.,2023க்குள் முடிக்க வேண்டும். ஆனால் இதுவரை முடிக்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் 18 கடைகள், நுழைவு வாயிலில் ஆர்ச், தரைதளம், கழிப்பறை கட்ட வேண்டும். ஆனால் இதுவரை இப்பணிகளை முடித்து நகராட்சியிடம் கான்ட்ராக்டர் ஒப்படைக்கவில்லை.
ஒப்பந்த பணியை முடிக்க காலதாமதம் ஏற்படுத்துவதால் 2024 ஜூலை 4 முதல் கான்ட்ராக்டருக்கு தினமும் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. இன்னும் பணியை முடிக்காமல் காலதாமதம் செய்வதால் கான்ட்ராக்டருக்கு தினமும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.