/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தினசரி காய்கறி மார்க்கெட்: சிலம்பணி ஊருணி அருகே மாற்றம்
/
தினசரி காய்கறி மார்க்கெட்: சிலம்பணி ஊருணி அருகே மாற்றம்
தினசரி காய்கறி மார்க்கெட்: சிலம்பணி ஊருணி அருகே மாற்றம்
தினசரி காய்கறி மார்க்கெட்: சிலம்பணி ஊருணி அருகே மாற்றம்
ADDED : அக் 16, 2025 11:47 PM
தேவகோட்டை: தேவகோட்டையில் செயல்பட்டு வந்த பஸ் ஸ்டாண்ட் இடநெருக்கடியில் செயல்பட்டது. பஸ் ஸ்டாண்டையொட்டி உள்ள தினசரி மார்க்கெட் இடத்தையும் சேர்த்து ரூ.12 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப் படவுள்ளது.
தினசரி மார்க்கெட்டில் உள்ள சிறு கடைகள் சிலம்பணி ஊருணி பகுதிக்கு மாற நகராட்சி யினர் கூறினர். வியாபாரிகள் ஏற்க மறுத்து கோர்ட்டை நாடினர். பழைய இடத் திலேயே மார்க்கெட் வேண்டும் என்றனர்.
அமைச்சர் பெரிய கருப்பன் முன்னிலையில் வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் பலனில்லை. காலி செய்வதில் குழப்பம் இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் பணி முடிந்து மீதமுள்ள காலியிடத்தில் சிறு, குறு வியாபாரிகளுக்கு வணிக வளாகம் கட்டித்தர வியாபாரிகள் மனு கொடுத்தனர்.
நகராட்சியினர் காலி யிடத்தில் கட்டலாம் என கூறியதை தொடர்ந்து காலி செய்ய சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் தீபாவளி வருவதால் பண்டிகை முடிந்து மார்க்கெட் சிலம்பணி ஊருணி பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.