/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் கனமழையால் வியாபாரம் கடும் பாதிப்பு! சாலையோர வியாபாரிகளிடம் அடாவடி வசூல்
/
காரைக்குடியில் கனமழையால் வியாபாரம் கடும் பாதிப்பு! சாலையோர வியாபாரிகளிடம் அடாவடி வசூல்
காரைக்குடியில் கனமழையால் வியாபாரம் கடும் பாதிப்பு! சாலையோர வியாபாரிகளிடம் அடாவடி வசூல்
காரைக்குடியில் கனமழையால் வியாபாரம் கடும் பாதிப்பு! சாலையோர வியாபாரிகளிடம் அடாவடி வசூல்
ADDED : அக் 16, 2025 11:48 PM

தீபாவளி பண்டிகையை ஒட்டி காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் தொடங்கி செக்காலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராள மான சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காரைக்குடி மட்டுமின்றி சிவகங்கையைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் புதுக்கோட்டை, மதுரை, கரூர், திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாலை நேரத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வருகை குறைவாக காணப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை முதலே கனமழை பெய்தது. வியாபாரிகள், வியாபாரம் செய்ய முடியாமல் கடைகளை தார்ப்பாய் மூலம் மூடிவிட்டு மழை விடும் வரை காத்து இருந்தனர்.
சாதாரண நாட்களில், சாலையோர கடைகளுக்கு 1 முதல் 10 சதுர அடி வரை ரூ.20ம், 15 சதுர அடிக்கு ரூ.25ம், 20 சதுர அடி வரை ரூ.30 மட்டுமே தரை வாடகை வசூல் செய்ய வேண்டும்.
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உட்பட பண்டிகை நாட்களில் இரு மடங்கு வசூலித்துக் கொள்ளலாம். ஆனால், தற்போது ரூ. 300 முதல் 500 வரை வசூல் செய்யப்படுவதாக வியாபாரிகள் புகார் கூறுகின்றனர்.
மழையால், வியா பாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்ணயித்த வசூலை விட பல மடங்கு வசூல் செய்வதால் தங்களின் வாழ்வாதாரமே கேள்விக் குறியானதாக வியா பாரிகள் தெரிவிக்கின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், தினமும் குத்தகைகாரர்களுக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது. தொடர்மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறைவான வியாபாரமே நடக்கிறது. சிறிய கடைக்கு ரூ.300 முதல் 400 வரை வசூல் செய்யப்படுகிறது.
அதிகாரிகளிடம் புகார் அளித்தால் கடையை காலி செய்யச் சொல்லி விடுவார்கள் என்ற அச்சத்தில் வேறு வழியின்றி வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு, கூடுதல் வசூலால் போராட்டம் நடைபெற்றது. ஆண்டு தோறும் இதேநிலைத் தொடர்கிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புகார் ஏதும் வரவில்லை. சாலையோர வியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் குறித்து விசாரித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும்.