/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் அணைக்கட்டு ஆய்வு
/
திருப்புவனத்தில் அணைக்கட்டு ஆய்வு
ADDED : ஜன 01, 2026 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பார்வையிட்டார்.
கானுார்,பழையனுார் உள்ளிட்ட கண்மாய்களின் பாசன தேவைக்காக வைகை ஆற்றின் குறுக்கே திருப்புவனம் புதுாரில் மிக நீளமான அணை கட்டப்பட்டுள்ளது.
கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த அணைக்கட்டை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பார்வையிட்டார். நீர்வளத்துறை மாவட்ட செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர்கள் வினோத், அழகுராஜா விளக்கமளித்தனர்.

