/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவர்சிலை பாதுகாப்பு வேலி சேதம்: பொதுமக்கள் போராட்டம்
/
தேவர்சிலை பாதுகாப்பு வேலி சேதம்: பொதுமக்கள் போராட்டம்
தேவர்சிலை பாதுகாப்பு வேலி சேதம்: பொதுமக்கள் போராட்டம்
தேவர்சிலை பாதுகாப்பு வேலி சேதம்: பொதுமக்கள் போராட்டம்
ADDED : செப் 19, 2024 02:06 AM

காரைக்குடி:காரைக்குடியில் முத்துராமலிங்கத் தேவரின் சிலை பாதுகாப்பு வேலியை சேதப்படுத்தியவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலையை சுற்றிலும் பாதுகாப்பாக இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இரும்பு வேல், மயில் போன்ற அலங்கார இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலியை ஒருவர் கல்லால் உடைத்து சேதப்படுத்திக் கொண்டிருந்தார்.
போலீசார் அந்த நபரை பிடித்து ஸ்டேஷன் கொண்டு சென்று விசாரித்தனர்.
அவர் பாண்டியன் நகரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் 32 ,என்பது தெரிய வந்தது. மேலும் அவர் இதற்கு முன்பு ஒரு முறை தேவர் சிலையை சேதப்படுத்த முயற்சி செய்து போலீசார் அவரது பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.
சிலையின் வேலி சேதம் அடைந்ததை அறிந்த 200க்கும் மேற்பட்டோர் தேவர்சிலை முன் குவிந்தனர்.
சேதப்படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தியதோடு, தினமும் போலீஸ் ஒருவரை சிலையின் அருகே பாதுகாப்பு பணிக்கு நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஏ.எஸ்.பி., அனிகேத் அசோக், தாசில்தார் ராஜா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.

