/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் குடிநீர் குழாய் சேதம்
/
திருப்புவனத்தில் குடிநீர் குழாய் சேதம்
ADDED : ஜூலை 08, 2025 10:15 PM

திருப்புவனம்; திருப்புவனத்தில் அடுத்தடுத்து அரசியல் கட்சியினர் கொடிக்கம்பம் நட இயந்திரங்களை பயன்படுத்துவதால் குடிநீர் குழாய் சேதமடைந்து வருகின்றன.
திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 16 கோடி ரூபாய் செலவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
திருப்புவனத்தில் அடுத்தடுத்து அரசியல் கட்சியினர் பலரும் அஜித்குமார் கொலை சம்பந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு கட்சி ஆர்ப்பாட்டத்தின் போதும் சாலையின் இருபுறமும் கட்சி கொடிகள் கட்ட கம்பங்கள் ஊன்றப்படுகின்றன. பொதுவாக கடப்பாரை மூலம் குழி தோண்டி கம்பம் நடுவது வழக்கம், தற்போது டிராக்டர் கம்ப்ரசர் மூலம் குழிகள் தோண்டப்படுகின்றன.
இயந்திரம் மூலம் குழிகள் தோண்டும் போது தரையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து வருகின்றன. திருப்புவனத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் குழாய்கள் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே குழாய் பதிக்கும் பணி முழுமையாக நிறைவேறாமல் அரைகுறையாக நடந்து வருகிறது.
அரசியல் கட்சியினரும் தங்கள் பங்கிற்கு டிராக்டர் மூலம் தரையில் துளையிடுவதால் குடிநீர் குழாய் சேதமடைந்து வருகின்றன.