/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழப்பசலை தடுப்பணையை ஒட்டிய கரைகள் சேதம்
/
கீழப்பசலை தடுப்பணையை ஒட்டிய கரைகள் சேதம்
ADDED : அக் 31, 2024 01:36 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே கீழப்பசலை தடுப்பணையில் இடதுபுற கரை சேதமடைந்து ஆற்றில் வரும் தண்ணீர் கிராம பகுதிகளுக்குள் செல்வதால் கல்குறிச்சி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை, மேலப்பசலை,சங்கமங்கலம்,ஆதனூர் ஆகிய 4கிராம கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து செல்லும் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
மேற்கண்ட கிராமங்களுக்கு தடையின்றி தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் மானாமதுரை தல்லாகுளம் அருகே வைகை ஆற்றுக்குள் கடந்த வருடம் தடுப்பணை கட்டப்பட்டு அதிலிருந்து மேற்கண்ட கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தடுப்பணையை ஒட்டி வைகை ஆற்றின் இரு புறங்களிலும் கரைகள் பலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று வந்த நிலையில் இடதுபுறம் நடைபெற்ற பணி அரைகுறையாக இருப்பதால் தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் வரும்போது கரைகளை உடைத்துக் கொண்டு அருகில் உள்ள கல்குறிச்சி கிராம பகுதியில் உள்ள நிலங்களிலும், மயான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அக்கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

