/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சீமைக்கருவேல மரங்களால் நெல் சாகுபடி பாதிப்பு
/
சீமைக்கருவேல மரங்களால் நெல் சாகுபடி பாதிப்பு
ADDED : அக் 28, 2024 07:20 AM

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றிய பகுதிகளில் பல கிராமங்களில் கண்மாய்களில் நீர் இருந்தும் வயல்களில் பெருகியுள்ள சீமைக்கருவை மரங்களால் நெல் சாகுபடி நடைபெறவில்லை.
தற்போது தொடரும் மழையாலும், மணிமுத்தாறு,பாலாற்றில் நீர்வரத்தாலும் திருப்புத்துார் பகுதி கண்மாய்களில் 2 மாதங்களுக்கான நீர் இருப்பு உள்ளது.
ஆனால் அதற்கேற்ப விவசாயிகள் நெல்சாகுபடி நடைபெறவில்லை. தொழிலாளர் பற்றாக்குறை முக்கியமான காரணமாக கூறப்பட்டாலும், வறட்சியால் பல வயல்களில் சீமைக்கருவை மரங்கள் வளர்ந்துள்ளது மற்றொரு காரணமாக உள்ளது.
சீமைக்கருவை மரங்கள் வளர்க்கப்படுவதால் பல வயல்கள் தரிசாகி விட்டன.
இந்த நிலங்களில் மீண்டும் விவசாயத்தை துவக்குவது கடினமான பணியாகி விடுகிறது.
சீமைக்கருவையால் பக்கத்து வயல்களிலும் நீர்வளம் பாதிப்பதுடன், சூரிய ஒளியை தடுப்பதால் நெல் சாகுபடியை பாதிப்பதாக விவசாயிகள் கருதுகின்றனர்.

