ADDED : அக் 21, 2024 05:05 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே இன்டாங்குளத்தில் புதிதாக போடப்பட்ட ரோடு ஒன்றரை மாதத்தில் சேதமடைந்ததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காரைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட இன்டாங்குளத்தில் உள்ள பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மராமத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக பாலத்தின் மேற்புறம் புதிதாக ரோடு போடப்பட்ட நிலையில் தற்போது அந்த ரோடு ஓரங்களில் பெயர்ந்து மிகவும் சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து இன்டாங்குளம் கிராம மக்கள் கூறியதாவது, பாலம் மராமத்து செய்யப்பட்டு அதன் மேல் புதிதாக சிறிது தூரத்திற்கு தார் ரோடு போடப்பட்டு ஒன்றரை மாதத்திற்குள்ளே ரோட்டின் ஓரங்களில் தார் ரோடு பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
இதனால் இவ்வழியாக சரக்கு வாகனங்கள், பஸ்கள் மற்றும் டூவிலர்கள் செல்லும் போது மேடு பள்ளமாக இருப்பதினால் விபத்து ஏற்படுகிறது. சேதமான ரோட்டை சீரமைக்க வேண்டும் என்றனர்.

