/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேதம் அடைந்த ரோடு; பொதுமக்கள் அவதி
/
சேதம் அடைந்த ரோடு; பொதுமக்கள் அவதி
ADDED : அக் 08, 2025 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,; மதகுபட்டி அருகே கட்டாணிப்பட்டியில் இருந்து வடவன்பட்டி வரை செல்லும் சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
இந்த சாலையை பயன்படுத்தி தான் கட்டாணிப்பட்டியில் இருந்து மதகுபட்டி வரை பஸ் இயக்கப்படுகிறது. கட்டாணிப்பட்டி, அழகமாநகரி, பெரியகோட்டைபட்டி, பொன்குண்டுபட்டி, ஏரியூர், தும்பைபட்டி, அரளிக்கோட்டையை சேர்ந்தவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேதமடைந்த சாலையில் அவசரத்திற்கு 108 ஆம்புலன்ஸ் கூட வேகமாக செல்லமுடியாத சூழல் உள்ளது. மழைகாலத்தில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.மாவட்ட நிர்வாகம் சேதம் அடைந்த இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.