/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 13, 2024 04:28 AM

காரைக்குடி: காரைக்குடி தேவகோட்டை ரஸ்தா சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சியில் 2017 ஆம் ஆண்டு பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்பட்டு தேவகோட்டை ரஸ்தாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் செல்லும் வழியில் தேவகோட்டை நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு குழாய்களும் பதிக்கப்பட்டு புதிய சாலை பணியும் நடந்தது.
அவ்வப்போது வரும் தொடர் மழையால் பாதாள சாக்கடையில் மழைநீர் புகுந்து வெளியேறி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவகோட்டை ரஸ்தா அருகே தேவகோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
தற்போது இச்சாலையின் பல இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். சேதமடைந்துள்ள சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஒட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

