/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைகளில் உருவாகும் பள்ளங்களால் ஆபத்து
/
சாலைகளில் உருவாகும் பள்ளங்களால் ஆபத்து
ADDED : மே 16, 2025 03:13 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சாலைகளில் உருவாகும் திடீர் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
இத்தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.
சில இடங்களில் அப்பள்ளங்கள் அருகே ரோடுகளில் வெடிப்பு, ஆபத்தான பள்ளம் உருவாகி வருகிறது. இப்பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி விடாமல் இருக்க அப்பகுதி மக்கள் குச்சிகளை ஊன்றி எச்சரிக்கை செய்துள்ளனர்.
ஆனாலும் இரவு நேரத்தில் பலரும் பள்ளங்களில் விழுந்து காயமடைவது தொடர்கிறது. காவிரி குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடவும், வெடிப்பு குழிகளை உடனடியாக சீரமைத்து விபத்துகளை தடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.