/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தாயமங்கலம் காஸ் நிரப்பும் நிலையம் அருகே ரோட்டில் லாரிகளை நிறுத்துவதால் அபாயம்

ADDED : மார் 20, 2025 06:06 AM

இளையான்குடி: தாயமங்கலம் சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் நிலையம் அருகே ரோட்டில் லாரிகளை நிறுத்துவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கையில் இருந்து இளையான்குடி செல்லும் ரோட்டில் தாயமங்கலம் கிழக்கு ரோடு அருகே இண்டேன் காஸ் நிரப்பும் நிலையம் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இந்த நிலையத்திற்கு சென்னை,மங்களூர் போன்ற இடங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் காஸ் கொண்டு வரப்பட்டு சிலிண்டர்களில் நிரப்பி விருதுநகர்,புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
சில மாதங்களாக இந்த நிலையம் முன்பாக செல்லும் ரோட்டின் இருபுறங்களிலும் சிலிண்டர் லாரிகள் வரிசையாக நிறுத்தப்படுவதால் பிற வாகனங்கள் செல்லும் போது விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
தற்போது தாயமங்கலம் திருவிழாவிற்காக இந்த வழியாக ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த நிலையத்திற்கு வரும் லாரிகளை அருகில் உள்ள காலியிடங்களில் நிறுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.