/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் ரோட்டின் நடுவே காத்திருக்கும் ஆபத்து
/
காரைக்குடியில் ரோட்டின் நடுவே காத்திருக்கும் ஆபத்து
காரைக்குடியில் ரோட்டின் நடுவே காத்திருக்கும் ஆபத்து
காரைக்குடியில் ரோட்டின் நடுவே காத்திருக்கும் ஆபத்து
ADDED : ஏப் 21, 2025 06:13 AM
காரைக்குடி: காரைக்குடி கல்லூரி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரின் தூண் உடைந்து பல ஆண்டுகளாகியும் சரி செய்யப்படாததால் விபத்து அபாயம் நிலவுகிறது.
காரைக்குடி நகரின் கல்லூரி சாலை அழகப்பா பல்கலை மற்றும் அழகப்பா அரசு கல்லூரி, பாலிடெக்னிக், இன்ஞ்., கல்லூரி, பள்ளிகள் உட்பட பல கல்வி நிறுவனங்கள் செல்லும் முக்கியச் சாலையாக உள்ளது.
இந்நிலையில், சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் தூண் ஒன்று, சில மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. அவ்வப்போது, இந்த தடுப்புச் சுவர் துாண் உடைந்து சாலையின் நடுவே விழுந்து கிடக்கிறது.
இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதனை சரி செய்கின்றனர். சேதமடைந்த தடுப்புச் சுவரை சரி செய்யாமல் முக்கிய வி.ஐ.பி.,க்கள் வரும் போது பெயிண்ட் மட்டுமே அடிக்கின்றனர். விபத்தை பொருட்படுத்தாமல் மெத்தனம் காட்டும் அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.