
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கீழக்கோட்டையில் சமகால நாள் அல்லது சம பகல் இரவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
சமகால நாள் வருடத்தில் 2 நாட்கள் மார்ச் 20, செப்.23 வரும். இந்தவருடம் செப்.22ம் தேதி வர உள்ளது. இந்த சம பகல் இரவு குறித்து மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சம பகல் இரவு நாள் குறித்து விளக்கினார்.
தலைமை ஆசிரியர் தெய்வானை, ஆசிரியர்கள் மீனாட்சி, ராஜாபாண்டி, அமலதீபா கலந்து கொண்டனர்.

