/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குவாரி விபத்தில் பலி 6 ஆக உயர்வு
/
குவாரி விபத்தில் பலி 6 ஆக உயர்வு
ADDED : மே 23, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி:சிங்கம்புணரி குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டை, மேகா புளூ மெட்டல் கிரஷர் குவாரியில், 18 தொழிலாளர்கள், மே, 21ல் பணியில் ஈடுபட்டிருந்த போது, பாறை சரிந்ததில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இரண்டு பேர் சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்தனர்.
மீட்கப்பட்ட, துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி மைக்கேல்ராஜ், 47, காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்று அதிகாலை அவரும் உயிரிழந்தார். இதையடுத்து, குவாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.