/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயிர்களுக்கு இழப்பீடு கூட்டத்தில் முடிவு
/
பயிர்களுக்கு இழப்பீடு கூட்டத்தில் முடிவு
ADDED : ஜன 10, 2025 05:04 AM
மானாமதுரை: மேலப்பசலை கிராமத்தில் 600 ஏக்கருக்கும் மேல் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருவதை தொடர்ந்து இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் சார்பில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது.
மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் நெற்பயிர்களை காட்டுப்பன்றி மற்றும் வனவிலங்குகள் சேதப்படுத்தியிருந்தால் அதற்கு வனத்துறை மூலம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வளர்ப்பு விலங்குகளாக இருந்தால் காப்பீடு மூலம் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

